Bridge to Equality
சமத்துவத்தினை தேடுதல் (BRIDGE செயற்திட்டம்) என்பது இலங்கையிலுள்ள தன்பாலீர்ப்புள்ள பெண்கள், தன்பாலீர்ப்புள்ள ஆண்கள், இருபாலீர்ப்புள்ளோர், திருநர்கள் மற்றும் குயர் (LGBTQ) சமூகத்தினருடைய மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக சர்வதேச மனித உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி LGBTQ சமூகத்திற்கான நீதி தீர்வுகளை மேம்படுத்த சட்ட செயற்பாட்டாளர்களுக்கு (நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் பிற சட்ட வல்லுநர்கள்), ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகள் பாதுகாவலர்களை வலுப்படுத்தல் மற்றும் தற்போதைய சட்ட கட்டமைப்பால் சுமத்தப்படும் சவால்களை சமாளிப்பதுடன், LGBTI சமூகத்தினரின் மனித உரிமைகளை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.
BRIDGE செயற்திட்டமானது 2021 ஆம் ஆண்டு முதல் சர்வதேச சட்டவல்லுனர்கள் ஆணைகுழுவுடன் இணைந்து இலங்கையின் DAST, இலங்கை தேசிய திருநர் வலையமைப்பு (NTNSL) மற்றும் Young Out Here Trust Sri Lanka ஆகிய அமைப்புக்கள் கூட்டிணைந்து செயல்படுத்தப்படுகிறது.