எமது பணி

BRIDGE செயற்திட்டமானது, LGBTQ சமூகத்தினருக்கான நீதியை மேம்படுத்த சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இலங்கையில் உள்ள LGBTQ சமூகத்தினருக்கான மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

BRIDGE செயற்திட்டமானது இலங்கையிலுள்ள LGBTQ சமூகத்தினரின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் பல்வேறு நீதித்துறை செயற்பாட்டாளர்கள், LGBT உரிமை ஆர்வலர்கள், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் பிற பங்குதாரர்களை ஒன்றிணைப்பதை பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த பணி நோக்கத்தினை அடைவதில், BRIDGE செயற்திட்டம் பின்வரும் விடயங்களை மேற்கொள்கிறது:

LGBTQ தனிநபர்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்களின் ஆவணப்படுதல் 

BRIDGE செயற்திட்டமானது, நாடு முழுவதும் பரந்துள்ள அதன் 20 ஆவணபடுத்தல் அதிகாரிகளினூடாக, LGBTQ சமூக உறுப்பினர்களை சென்றடைகிறது மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்துகிறது. BRIDGE செயற்திட்டத்தினூடாக இதுவரை 200க்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல் வழக்குகளை சேகரித்துள்ளதுடன். குறித்த ஆவணப்படுத்தல் அதிகாரிகள் NTN மற்றும் YOH ஆகிய இரு நிறுவனங்களால்  நிர்வகிக்கப்படுகிறார்கள்.

நாங்கள் இதுவரை சேகரித்த வழக்குகள் பற்றி அறிந்து கொள்ள  மேலும் படிக்கவும்.

நாங்கள் இதுவரை சேகரித்த வழக்குகள் பற்றி அறிந்து கொள்ள  மேலும் படிக்கவும்.

மனித உரிமை மீறல்களில் இருந்து தப்பியவர்களுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (HRCSL) முறைப்பாடுகளை மேற்கொண்டு நீதியைப் பெற்றுக்கொடுக்க ஆவணப்படுத்தல் அதிகாரிகள் உதவுகின்றனர். இதுவரை 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் ஆவணப்படுத்தல் அதிகாரிகளுக்கு NTN மற்றும் YOH அமைப்புகள் மற்றும் உள்ளூர் சட்ட ஆலோசகர் மற்றும் தேசிய சட்ட ஆலோசகர் ஆகியோரால் வழிநடத்தப்பட்டுள்ளன. BRIDGE செயற்திட்டத்தின் ஆவணபடுத்தல் அதிகாரிகளால்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் 50 க்கும் மேற்பட்ட வழக்குகளுக்கு இதுவரை  பதில்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

திறன் மேம்பாடு

திறன் மேம்பாடு என்பது  BRIDGE செயற்திட்டதால் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலோபாய கருவி ஆகும். இச்செயற்திட்டத்தில்  இரண்டு திறன் மேம்பாட்டு கூறுகள் காணப்படுகின்றன; அவையாவன, ஒன்று சட்டத்தரணிகள் திறனை வளர்த்தல் மற்றும் இரண்டாவதாக ஆவணப்படுத்தல் அதிகாரிகளின் திறனை வளர்ப்பது ஆகும்.

சட்ட விழிப்புணர்வு பயிற்சிபட்டறைகள் – 2022 ஆம் ஆண்டு முதல், DAST தலைமையில், BRIDGE செயற்திட்டமானது நீதவான் நீதிமன்றங்களில் பணிபுரியும் மற்றும் குற்றவியல் நடவடிக்கைகளில் நிபுணத்துவம் பெற்ற சட்டத்தரணிகளை இலக்குவைத்து இதுவரை நான்கு சட்ட விழிப்புணர்வு பயிற்சிபட்டறைகளை மேற்கொண்டிருந்தது. LGBTQ சமூகம் குறித்த சர்வதேச சட்டங்கள் மற்றும் மனித உரிமைகளை பாதிக்கும் தேசிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து இதுவரை 180க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் பயிற்சி பெற்றுள்ளனர். பயிற்சிபட்டறைகளை எளிதாக்குவதற்காக BRIDGE செயற்திட்டதால் நான்கு துணைத் தொகுதிகளைக் கொண்ட சட்ட விழிப்புணர்வுப் பயிற்சித் தொகுப்பு புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.

எமது சட்ட விழிப்புணர்வு பயிற்சி தொகுதி பற்றி அறிந்துகொள்ள  மேலும் படிக்கவும்

ஆவணப்படுத்தல் அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிப்பட்டறை – BRIDGE ஆனது ஆவணப்படுத்தல் அதிகாரிகளின் திறனை வளர்ப்பதனூடாக, அவர்களை LGBTQ சமூகத் தலைவர்களாக முன்னேற உதவுகிறது. இந்த இலக்கை அடைவதில், NTN மற்றும் YOH அமைப்புகளின் தலைமையில், DAST இதுவரை ஆவணப்படுத்துதல் அதிகாரிகளுக்கான ஐந்து திறன் மேம்பாட்டுப் பயிற்சி பட்டறைகளை வெற்றிகரமாக ஏற்பாடு செய்திருந்தது. இவை முக்கியமாக மனித உரிமைகள், தேசிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள், ஐநா மனித உரிமைகள் வழிமுறைகளைப் புரிந்துகொள்ளுதல், காவல்துறையை அணுகும் முறை மற்றும் காவல்துறையிடம் புகார்கள் செய்தல் தொடர்பான தெளிவு, மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வழக்குகளை முறைப்பாடு செய்தல் மற்றும் பல விடயங்களில் அவர்களின் திறனை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறது.

எமது ஆவணப்படுத்தல் அதிகாரிகளின் அனுபவங்களைக் கேளுங்கள்

பிரச்சாரம்

அதிகமான பார்வையாளர்களை அடைவதற்கு YOH தலைமையில், Facebook, Instagram மற்றும் twitter போன்ற சமூக ஊடக தளங்களில் BRIDGE செயற்திட்டம் முழு அளவிலான சமூக ஊடக பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.

இளம் செயற்பாட்டாளர் கூட்டமைப்பு

NTN தலைமையின் கீழ் நிறுவப்பட்டுள்ள இளம் செயற்பாட்டாளர் கூட்டமைப்பானது (YAC), இளம் LGBTQ நபர்களை எதிர்காலத் தலைவர்களாக்குவதற்காக அவர்களை வழிகாட்டி மற்றும் அவர்களின் திறனை வளர்ப்பதற்கான ஒரு தளமாகும். 20 இளம், ஆற்றல் மிக்க மற்றும் துடிப்புள்ள இளைஞர்களைக் கொண்ட YAC ஆனது, 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து செயல்பட்டு வருகிறது.

இங்கே YAC பற்றி மேலும் அறியவும்.

ஒன்றிணைவு மற்றும் ஒருமைப்பாட்டுக்கான கூட்டமைப்பு

அமைப்பின் சுருக்கப்பெயர் விவரிப்பது போலவே, BRIDGE செயற்திட்டமானது அதன் அனைத்து பங்குதாரர்களையும் சிறந்த மற்றும் நிலையான நீதி தீர்வுகளை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. BRIDGE செயற்திட்டமானது, LGBTQ உரிமைகள் இயக்கமானது ஒவ்வொரு LGBT நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டாண்மைகளின் வலிமையைப் போலவே வலுவானது என்பதை  உணர்ந்துகொண்டுள்ளது. இவ்வாறான கூட்டாண்மைகளை எளிதாக்கும் வகையில், BRIDGE செயற்திட்டமானது, NTN தலைமையில் ஒன்றிணைவு மற்றும் ஒருமைப்பாட்டுக்கான கூட்டமைப்புக்கு உதவுகிறது, இது நாட்டிலேயே முதன்மையானது என்பதோடு, தேசிய அளவில் LGBTQ தலைமையிலான பெரும்பாலான அமைப்புக்களை ஒன்றிணைத்து ஒரு ஒருங்கிணைந்த குரலை தோற்றுவிக்கிறது.

கட்புல செவிப்புல சாதனங்கள்

BRIDGE செயற்திட்டமானது, DAST தலைமையில் BRIDGE சமூக ஊடக தளங்களில் மற்றும் BRIDGE ஆல் ஏற்பாடு செய்யப்படும்  பயிற்சிபட்டறைகள் மற்றும் நிகழ்வுகளில் வளங்களாக பயன்படுத்த காணொளிகளை உருவாக்கியுள்ளது.

எமது காணொளிகளை இங்கே காண்க

மூலோபாய தகவல்

BRIDGE செயற்திட்டத்திம் முழுமையான மூலோபாய தகவலின் அபிவிருத்தி அடிப்படையில் இயங்குகிறது.  BRIDGE செயற்திட்டம் YOH தலைமையில்,ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள், LGBTQ சமூக உறுப்பினர்களின் முக்கிய தகவல்கள், புத்தகங்கள் மற்றும் பலவாறாக பகுப்பாய்வினை தொடர்சியாக தயாரித்து வருகிறது

எமது மூலோபாய தகவல் ஆவணங்கள் பற்றி மேலும் அறிய..