BRIDGE to Equality (BRIDGE) செயற்திட்டமானது DAST, இலங்கை தேசிய திருநர் வலையமைப்பு (NTNSL) மற்றும் Young here Sri Lanka Trust (YOH) ஆகிய அமைப்புக்களின் கூட்டிணைப்பில் செயல்படுத்தப்படுகிறது. இதுவே இலங்கையில் LGBT சமூகங்களுடன் இணைந்து பணியாற்றும் மற்றும் சமூகத்தினை வழிநடத்தும் மூன்று நிறுவனங்களின் முதல் கூட்டிணைந்த முயற்சியாகும். இந்த BRIDGE செயற்திட்டத்தினை சர்வதேச சட்டவல்லுனர்கள் ஆணைக்குழுவின் உதவியுடன் செயற்படுத்தப்படுகிறது.
BRIDGE செயற்திட்டத்தின் ஒன்றிணைந்த மற்றும் ஒட்டுமொத்த இலக்கானது, இலங்கையில் SOGIESC அடிப்படையிலான மனித உரிமை மீறல்களை (HRVs) நிகழாமல் தடுப்பதும், அவை நிகழும்போது நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் தீர்வுக்கான அதிக அணுகலை உறுதி செய்வதும் .
யங் அவுட் ஹியர் (YOH) ஸ்ரீலங்கா அறக்கட்டளை என்பது இலங்கையில் உள்ள பல்வேறு பாலீர்ப்பு, பால்நிலை அடையாளங்கள், பால்நிலை வெளிப்பாடுகள் மற்றும் பால்நிலை பண்புகள் (SOGIESC) கொண்ட முக்கிய இளைஞர் சமுதாயத்திற்கு (YKP) சமூக விழிப்புணர்வு உள்ளிட்ட பயனுள்ள சேவைகளை வழங்க உறுதிபூண்டுள்ள இளைஞர் வலையமைப்பாகும். YOH தற்போது இலங்கையில் SOGIESC சமத்துவத்தை நிலைநாட்ட பல சமூக அடிப்படையிலான நிறுவனங்களுடன் கூட்டாண்மையுடன் செயல்பட்டுவருகிறது, SOGIESC அடையாளங்கள் மற்றும் முக்கிய இளைஞர் சமுதாயங்களின் இளைஞர்களை அவர்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அணிதிரட்டுவது மற்றும் தீர்மானமெடுக்கும் மற்றும் கொள்கை உருவாக்கும் மட்டங்களில் இளைஞர்களின் குரல்களுக்கான தளங்களை உருவாக்குவதும் அதன் பணியின் ஒரு பகுதியாகும்.
2018 இல் நிறுவப்பட்ட இலங்கை தேசிய திருநர் வலையமைப்பு அறக்கட்டளையானது, இலங்கையிலுள்ள திருநர்களுக்கு ஆதரவளித்துவரும் ஒரு இலாப நோக்கமற்ற அமைப்பாகும்.
இலங்கை தேசிய திருநர் வலையமைப்பு, இலங்கையில் இடைநிலை சேவைகள் மற்றும் ஆவண மாற்ற செயல்முறைகளை இலகுவாக அணுகுவதற்கும், LGBTIQ நபர்களை இலக்காக கொண்ட மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்துவதற்கும், HIV மற்றும் STI கள் பற்றிய கல்வியை வழங்குவதற்கும், ஆணுறைகள் மற்றும் லூப்ரிகண்டுகள் விநியோகம், ஆலோசனை சேவைகள், சட்ட உதவி மற்றும் திருநர்களுக்கு தற்காலிக தங்குமிட வசதிகளை வழங்குதல் மற்றும் உளவியல் ஆதரவு மற்றும் பால்நிலை அடையாள சேவைகள் உள்ளிட்ட சேவைகளுடன் ஆதரவளித்து வருகிறது.
DAST என்பது அர்த்தமுள்ள சமூக ஈடுபாடு மற்றும் பங்கேற்பு, மூலோபாய தகவல் மேம்பாடு, திறன் மேம்பாடு மற்றும் பயனுள்ள வாதங்கள், உரிமைகளை உறுதிப்படுத்துதல், பால்நிலை மாற்றியமைப்பு மற்றும் நிலையான HIV, SRHR மற்றும் கிடைக்கப்பெற்ற மனித உரிமைகள் ஆகியவற்றுக்காக வாதிடுதல் உள்ளிட்டவற்றுக்கான சேவைகளை வழங்கும் சமூகம் தலைமையிலான ஆதரவளிப்பு அமைப்பாகும். HIV, TB க்கு பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்களுடன் நெருங்கி வாழும் LBTIQ சமூகங்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட (ஆனால் அதற்குள் மாத்திரம் அடங்காத) இலங்கையில் உள்ள விளிம்புநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்கள் சுகாதார, பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் உரிமைகள் (SRHR) மற்றும் மனித உரிமைகள் துலங்கல்களுக்கு மையத்தில் இருப்பதாக DAST கருதுகிறது.