தொடர்புகளுக்கு – Bridge to Equality

BRIDGE செயற்திட்டமானது, LGBTQ சமூகத்தினருக்கான நீதியை மேம்படுத்த சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தைப் பயன்படுத்துவதன் மூலம் இலங்கையில் உள்ள LGBTQ சமூகத்தினருக்கான மனித உரிமைகளைப் பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

BRIDGE to Equality (BRIDGE) செயற்திட்டமானது DAST, இலங்கை தேசிய திருநர் வலையமைப்பு (NTNSL) மற்றும் Young here Sri Lanka Trust (YOH) ஆகிய அமைப்புக்களின் கூட்டிணைப்பில் செயல்படுத்தப்படுகிறது. இதுவே    இலங்கையில் LGBT சமூகங்களுடன் இணைந்து பணியாற்றும் மற்றும் சமூகத்தினை வழிநடத்தும் மூன்று நிறுவனங்களின் முதல் கூட்டிணைந்த முயற்சியாகும். இந்த BRIDGE செயற்திட்டத்தினை சர்வதேச சட்டவல்லுனர்கள் ஆணைக்குழுவின் உதவியுடன் செயற்படுத்தப்படுகிறது.

BRIDGE செயற்திட்டத்தின் ஒன்றிணைந்த மற்றும் ஒட்டுமொத்த இலக்கானது, இலங்கையில் SOGIESC அடிப்படையிலான மனித உரிமை மீறல்களை (HRVs)  நிகழாமல் தடுப்பதும், அவை நிகழும்போது நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் தீர்வுக்கான அதிக அணுகலை உறுதி செய்வதும் .


செயற்திட்டத்தின் நோக்கங்களாவன;

01
சமூகத்தினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டக் கட்டமைப்பைப் புரிந்துகொள்வதற்கு உள்ளூர் ஆர்வலர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்களின் (HRDs) திறன்களை மேம்படுத்தல் மற்றும் பாரபட்சமான சட்டங்களை நீக்குவதற்கு வாதிடுபவர்களின் பணி உள்ளிட்டவற்றை ஆதரித்து வலுப்படுத்துதல்;
02
SOGIESC அடிப்படையிலான வன்முறை மற்றும் பாகுபாடு பற்றிய விழிப்புணர்வினை நீதிபதிகள் மற்றும் பிற சட்ட வல்லுநர்களிடையே அதிகரித்தல் - இதனூடாக கடமைகளுக்கு பொறுப்பானவர்கள் LGBTI உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிசெய்தல் மற்றும் பாரபட்சமான சட்டங்களை நீக்குவது தொடர்பான வாதங்களுக்கு ஆதரவளித்தல்;
03
SOGIESC தொடர்பான சர்வதேச சட்ட மற்றும் தரங்களைப் புரிந்துகொள்ளும் திறனை வளர்ப்பதன் மூலம் உள்ளூர் LGBTI நிறுவனங்கள் மற்றும் ஆர்வலர்கள் அடங்கிய முக்கியமான குழுவை ஆதரித்தல், LGBTI நபர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல் வழக்குகளை பாதுகாப்பாக ஆவணப்படுத்துதல் மற்றும் தற்போதுள்ள தேசிய மற்றும் சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு கட்டமைப்புகளைப் பயன்படுத்தி மாற்றத்திற்காக வாதிடுதல்; மற்றும்
04
LGBTI நபர்களை மனித உரிமைகளுக்கு உரித்தானவர்களாக ஏற்றுக்கொள்ளல் மற்றும் புரிதலைக் கொண்டுவரும் நோக்குடன் LGBTI சமூத்தினருக்கு எதிரான பாரபட்சமான அணுகுமுறைகளை நிவர்த்தி செய்ய பரந்த மனித உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சமூகத்தையும் பொதுமக்கள் கருத்தையும் ஈடுபடுத்துதல்.

செயற்திட்ட கூட்டாண்மையாளர்கள்